வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக புதிய கட்டடம் திறந்து வைப்பு
26th February 2018
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வன்னி;ப பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான வருகையை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (25)திகதி புதிய இரு தட்டு கட்டடக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் இப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் பங்களிப்போடு மத வழிபாடுகளான செத் பிரித் போன்றன இடம் பெற்றது.
அந்த வகையில் தளபதியவர்களை வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை அதிகாரியவர்கள் வரவேற்றதுடன் படை வீரரர்களுக்கான உணவூ விடுதியூம் திறந்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் 2ஆவது பொறியியலாளர் சேவைப் படையினரால் புதிதாக இப் படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட கேட்போர் கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு வருகை தந்த தளபதியவர்களால் படையினருக்கான உரை நிகழ்த்தப்பட்டதோடு அவர்களது நலன்புரி சேவைகள் தொடர்பாகவூம் வினவப்பட்டது.
அதன் பின்னர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.
சில நிமிடங்களின் பின்னர் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிதிகள் புத்தகத்தில் தளபதியவர்களால் கையொப்பமிடப்பட்டதுடன் இப் உணவூ விடுதிகளில் ஒழுக்கத்தை பேனுமாறும் படையினருக்கு தெரிவித்துள்ளார்.
|