56ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டடம் திறந்து வைப்பு

25th February 2018

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 56ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டடம் சனிக் கிழமை (24) திகதி புதிய இரு தட்டு கட்டடக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வன்னிபபாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் பங்களிப்போடு 56ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் திஸ்ஸ நாணயக்கார அவர்களின் பங்களிப்போடு கொக்கிலாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை 56ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியவர்கள் வரவேற்றதோடு இக் கட்டடமானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் தளபதியவர்களால் குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.

மேலும் 56ஆவது படைத் தலைiயைக படையினரால் பிரதம அதிதியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதையூம் வழங்கப்பட்டது.

இவ் இரு மாடிக் கட்டடத்தில் கணினி கூடம் கேட்போர் கூடம் போன்றன காணப்படுகின்றது.

சில நிமிடங்களின் பின்னர் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிதிகள் புத்தகத்தில் தளபதியவர்களால் கையொப்பமிடப்பட்டது.

|