9ஆவது இராணுவ சிங்கப் படையினர் தீயனைப்பு சேவைகளில் ஈடுபாடு
25th February 2018
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தின் 12ஆவது படைப் பிரிவின் 9ஆவது இராணுவ சிங்கப் படையினர் மொனராகலை மாவட்டத்தில் பதல்கும்புர வெஹெரகொடை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (23) தீடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் படையினர் செயற்பட்டனர்.
அந்த வகையில் இப் படையினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ரும்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 12ஆவது படைப் பிரிவின் 9ஆவது இராணுவ சிங்கப் படையினர் பதல்கும்புர பிரதேசத்தில் இம் மீட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் 12ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சிஷாந்த வன்னியாராச்சியவர்களின் கண்காணிப்பின் கீழ் 25இராணுவப் படையினர் இத் தீயனைப்பு சேவைகளை மேற்கொண்டுள்ளனர்.
|