படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

24th February 2018

கொழும்பு களுத்துறை குருநாகல் கண்டி மாத்தளை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் உள்ளங்களான 680ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினரின் தலைமையில் மேற்படி மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் கடந்த வியாழக் கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் பிரதி பாதுகாப்பு பதவிநிலைப் பிரதான காரியாலயத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கை இராணுவம் மற்றும் அரச ஊழியர்களின் பங்களிப்பில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி கூறப்பட்ட மாவட்டங்களில் பல படைத் தலைமையங்களை உள்ளடக்கிய 680ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த வெள்ளிக் கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க சுகாதார அதிகாரிகள் அரசாங்க ஊழியர்கள் பொதுமக்கள் முப் படையினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோரின் உள்ளடங்களாக நாடளாவிய ரீதியில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் படையினரால் புகையிரத நிலையங்கள் மருத்துவமனைகள் பஸ் நிலையங்கள் பஸ் டிப்போக்கள் பள்ளி வளாகங்கள் சந்தைகள் கோயில்கள் போன்ற பொது இடங்களில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இராணுவப் படையினரால் முன்னரே நாடளாவிய ரீதியில் நுளம்புப் பெருக்கத்தை தடுப்பதற்கான சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு எதிர் வரும் வாரங்களிலும் இப் பணிகள் தொடரப்படவுள்ளன.

|