பேருந்து வெடிப்பு சம்பவம் தொடர்பான இராணுவ விசாரனைகள் ஆரம்பம்

23rd February 2018

தியத்தலாவை கஹாகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பேருந்து வெடிப்பு சம்பவத்தில் இராணுவ விமானப் படையினர் மற்றும் பொதுமக்கள் தீவிர காயமடைந்ததுடன் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் இராணுவ புலனாய்வூப் பிரிவினர் உள்ளடங்களான ஆறு பேர் கொண்ட இராணுவ விசாரனைக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ் விடயம் தொடர்பான விபரக் கோவை இவ் இராணுவ விசாரனைக் குழுவினரால் இராணுவத் தளபதிவயர்களிடம் ஒப்படைக்கப்படவூள்ளது.

இவ் விசாரனைக் குழுவில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகப் பிரிவின் அதிகாரியான பிரிகேடியர்ட இ ஆர் பி வீரவர்தன ஸ்நைபர் பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியான பிரிகேடியர் பி எம் எல் சந்திரசிறி இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் கேர்ணல் ஜெனரல் பிரதானியான கேர்ணல் பி பி ஏ பெரேரா 7ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியனா லெப்டினன்ட் கேர்ணல் எச் டீ ஜெ வி வீரதுங்க மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் அனு உயிரியல் மற்றும் இரசாயணவியல் ஆய்வூ அதிகாரியனா மேஜர் என் ஏ பீ எம் எஜ் நிஷ்ஷங்க போனறோறும் காணப்படுகின்றனர்.

|