பஸ் தீ விபத்தில்19 பயணிகள் காயம்

21st February 2018

(ஊடக அறிக்கை)

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவவுக்கு பயணித்த தனியார் பஸ்வண்டியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தியதலாவை கஹகொல்ல பிரதேசத்தில் இன்று காலை 5.45 மணிக்கு இடம்பெற்றுள்ளன.

காயமுற்ற பயணிகளினுள் 7 இராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் உள்ளடங்குவர். காயமுற்ற இந்த பயணிகளை மருத்துவ சிகிச்சைக்காக தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.

இந்த சம்பவத்தில் எந்த வித பயங்கரவாத செயற்பாடுகளும் இல்லை என்று இராணுவம் மறுக்கின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரனை ஆரம்பமாகியுள்ளது. (முடிவு)

|