மற்றுமோர் குழுவினர் லெபனானின் பணிகளுக்காக விஜயம்

19th February 2018

ஐக்கிய நாடுகளின் லெபனான் நாட்டின் சமாதானப் பணிகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவூள்ள (UNIFIL) இலங்கை இராணுவத்தின் 12ஆவது பாதுகாப்பு படையின் (FPC) 2ஆம் கட்ட குழுவினர் இன்று காலை திங்கட் கிழமை (19) தமது பயணத்தை மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் 34குழுக்குகளை உள்ளடங்க்கிய 150 படையினர் இவ் ஐநாவின் லெபானன் நாட்டின் சமாதான நடவடிக்கைப் பணிகளில் பங்கேற்கவூள்ளனர்.

இதன் முதற் கட்ட 16 குழுவினரான இராணுவத்தினர் ஐநாவின் நடவடிக்கைப் பணிகளுக்கான விஜயத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) மேற்கொண்டனர்.

மேலும் இதன் அடுத்த கட்ட பாதுகாப்பு படையினர் எதிர் வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி 2018ஆம் ஆண்டு இப் பணிகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

|