இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு இராணுவ தளபதி விஜயம்

18th February 2018

சனிக்கிழமை (17) ஆம் திகதி இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு குகுலேகங்கை இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்ற செயலமர்வுக்கு இராணுவ தளபதி லெப்டினன்’ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் பதிரத்ன அவர்கள் இராணுவ தளபதியை வரவேற்று இந்த செயலமர்விற்கு அழைத்து சென்றார்.

மேலும் இராணுவ தளபதியினால் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான விபரங்களை கணிகாணித்து விபரங்கள் முன்வைக்கும்படி பணிப்புரைத்தார்.

சமாதான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று இராணுவ தளபதி படையினர் மத்தியில் உறையாற்றும்போது உறுதியளித்தார்.

|