கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கான ரக்பி பயிற்ச்சிகள்
18th February 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கான இரு நாள் ரக்பி பயிற்ச்சிகள் உள்ளடங்களான பல விளையாட்டுக்கள் போன்றன கிளிநொச்சி சென்றல் கல்லுாரி மைதானத்தில் இடம் பெற்றது.
இதற்கான முதல் நாள் பயிற்ச்சிகள் (14பெப்ரவரி) 7 அதிகாரிகள் மற்றும் 143 படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றதுடன் இலங்கை ரக்பி கழகம் மற்றும் சர்வதேச ரக்பி கழகத்தின் பயிற்றுவிப்பாளர்களும் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான (15 பெப்ரவரி) கிளிநொச்சி பாடசாலையின் 400 ரக்பி மாணவர்கள் சென்றல் கல்லுhரி வளாகத்தில் இடம் பெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
அத்துடன் கிளிநொச்சிப் பிரதேசத்தின் ரக்பி விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இலங்கையின் ரக்பி முன்னேற்ற சங்கத்தின் தலைவரும் முன்னால் இராணுவத் தளபதியூமான ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வூ) அவர்கள் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார்.
அந்த வகையில் இவ் ரக்பி பயிற்ச்சிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றதுடன் கிளிநொச்சிப் பாடசாலை மாணவர்களின் ரக்பி விளையாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இடம் பெற்றது.
இலங்கை ரக்பி கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு பிரியந்த ஏகநாயக்க இலங்கை ரக்பி கழகத்தின் உயர் செயல்திறன் பணிப்பாளர் திரு இந்தி மரிக்கார் மேற்கு மாகான ரக்பி கழக தலைவரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான (ஓய்வூ) எம் எச் மாரோஸ் நியூசிலாந்து விiளாயாட்டு வீரரும் சர்வதேச பயிற்றுவிப்பாளருமான திரு பீட்டர் வூட் இலங்கை ரக்பி கழகத்தின் அதிகாரிகள் மாவட்ட விiயாட்டு திணைக்கத்தின் பணிப்பாளர்கள் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் போன்றோர் இணைந்து இப் பயிற்ச்சிகளை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றௌர் போன்றனர் கலந்து கொண்டனர்.
|