கிரேன்பாஸில் பாழடைந்த கட்டிடம் சரிவு மீட்பு பணிகளில் இராணுவம்

14th February 2018

கொழும்பில் உள்ள கிரேன்பாஸ் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கட்டிடம் இன்றைய தினம் புதன் கிழமை பகல் இடிந்து வீழ்ந்தது.

இந்த கட்டிட அவசர மீட்பு பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல்மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது கட்டளைக்கமைய இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

|