11 வது காலாட் படைப்பிரிவில் நன்கொடை திட்டம்

3rd October 2024

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்யூ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 01 ஒக்டோபர் 2024 அன்று 11 காலாட் படைப்பிரிவில் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

11 வது காலாட் படைப்பிரிவில் பணியாற்றும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.