பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் புதிய மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு
5th February 2018
இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்கள் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரலாக (05)ஆம் திகதி திங்கட்கிழமையன்று இராணுவ தலைமையக காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்றார்.
அதனைத்தொடர்ந்து மகா சங்கத்தின் பௌத்த மத ஆசீர்வாதங்களுடன் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரலாக முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு அவரது கடமை பொறுப்பேற்றார். பின்னர், அவர் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துறையாடினார்.
மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன, புதிய நியமனம் பெறுவதற்கு முன்னர், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57ஆவது படை பிரிவில் கட்டளைத் தளபதியாக பணியாற்றினார்.
|