அம்பேபுஸ்ஸயில் 11 வது சிங்க படையணியினரால் நடத்தப்பட்ட படையலகுகளுக்கு இடையிலான காற்பந்து போட்டி
13th September 2024
11 வது சிங்க படையணியினரால் நடத்திய 2024 - படையலகுகளுக்கு இடையிலான காற்பந்து போட்டி 09 செப்டம்பர் 2024 அன்று சிங்க படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை 1 வது சிங்க படையணி படையினர் தனதாக்கி கொண்டதுடன் இரண்டாம் இடத்தைப் 21 வது சிங்க படையணி பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே கலந்துகொண்டார். போட்டியை கண்டுகளிக்க சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.