இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையரினால் முதியோர் இல்லத்திற்கு உணவு
21st September 2024
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவெந்த்ரினி ரொட்ரிகோ அவர்களின் முயற்சியில் சேவை வனிதையர் பிரிவின் அனைத்து உறுப்பினர்களினால் இலங்கையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 07 ஆம் திகதி செனஹச முதியோர் இல்லத்தில் 60 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் முதியோர்களின் பயன்பாட்டிற்காக அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் சிஎஸ் முனசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.