மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 571 வது பிரிகேடிற்கு விஜயம்
17th September 2024
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 செப்டம்பர் 16 அன்று 571 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.
வருகை தந்த மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியை 571 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஐஜீஜேபீ திலகரத்ன யூஎஸ்பீ அவர்கள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்று விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.
இந்த கலந்துரையாடலில் பிரதேசத்தின் பாதுகாப்பு, தேர்தல் கடமைகளுக்காக படையினரை அனுப்புதல், முகாம் வசதிகளை நிர்மாணிப்பதில் இடம்பெற்று வரும் முன்னேற்றம் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.