பத்தரமுல்லையிலிருந்து ‘Ride with Pride’ என்ற சைக்கிள் சவாரி

30th January 2018

இராணுவ விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் கடற்படை, விமானப்படையினரின் பங்களிப்புடன் முதல் தடைவையாக‘Ride with Pride’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த சைக்கிள் சவாரி (31) ஆம் திகதி இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இருந்து ஆரம்பமாகும்.

200 க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இந்த சைக்கிள் சவாரியில் ஈடுபடுத்தி இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.இதற்கான ஒழுங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சவாரிகள், தலவாத்துகொட, பெலவத்த, பன்னிபிட்டிய, கொட்டாவா, ஹோமகம, பிட்டிபன சந்தி வழியாக கடந்து சென்று பனாகொட இராணுவ முகாமை வந்தடையும்.

|