கேப்பாப்பிளவு பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்காக முல்லைத் தீவு படையினரால் குடிநீர் வசதிகள்

30th January 2018

முல்லைத் தீவு பாதுகாப்புப் படையினரால் மீண்டுமோர் மணிதாபிமான நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த வகையில் முல்லைத் தீவூ கேப்பாப்பிளவு 133.4 இடப் பரப்பில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யூம் நோக்கில் முல்லைத் தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் தலைமையில் புதிய இரு குடிநீர்த் தாங்கிகள் கடந்த வெள்ளிக் கிழமை (26) பொது மக்களின் தேவைகளுக்காக இலவசமாக வழங்கப்பட்டது.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் 24 கிணறுகள் படையினரால் சுத்திகரிக்கப்பட்டது.

மேலும் நீரினை சுத்திகரிக்கும் தாவரமான ஒஸ்மொசிஸ் உம் இப் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் வைத்து பொது மக்களுக்காக வழங்கப்பட்டது.

அத்துடன் இம் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குடிநீர் வசதிகள் இன்றி மிகவூம் அல்லல்பட்டு காணப்பட்டதுடன் இவர்களுக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கேர்ணல் எச் வல்கம அவர்கள் மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவை முன்னிலைப்படுத்தி கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் படையினர் போன்றௌரும் கலந்து கொண்டனர்.

|