இராணுவ தளபதியின் உயர் பதவி நியமணத்தினை முன்னிட்டு அணிவகுப்பு மரியாதை
28th June 2017
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் ஜெனரல் உயர் பதவி நியமனத்தினை முன்னிட்டுஇராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வானது இன்றய தினம் காலை வேளை (28) வியாழக் கிழமை மிக விமரிசையாக பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்றது.
2015 பெப்பிரவரி மாதம் இராணுவத் தளபதியாக பதிவியேற்று சேவையாற்றிய ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் சேவையின் போதே இவ்வாறான பதவி உயர்வு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதனைத் தொடர்ந்து இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியவர்களின் தலைமையின் கீழ் இராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்ந அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் 50 பொறியியளாளர் படையணியினர் உள்ளடக்கப்பட்டதுடன் பொறியியளாளர் படையணியினைச் சேர்ந்த இராணுவ அதிகாரியான கெப்டண் எச் எம் எஸ் சி பி ஹேரத் இந்த அணிவகுப்பிற்கு தலைமைதாங்கியுள்ளார். இந் நிகழ்வில் இராணுவப் பதவிநிலை பிரதாணியான மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உதவி பதவிநிலை பிரதாணியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றோர் கலந்து கொண்டனர்.
|