படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட பந்தயம் 2024ல் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வெற்றி

7th August 2024

இராணுவ சைக்கிள் ஓட்டுதல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான சைக்கிளோட்டப் போட்டியானது, 2024 ஆண்டு ஜூலை 24-25 ஆம் திகதிகளில் உடவளவை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தளப் பணிமனையில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ,அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் 11 படையணிகளை சேர்ந்த 140 சைக்கிள் வீரர்கள் நிலையான மற்றும் பந்தய சைக்கிள் பந்தயங்கள், பெண்களுக்கான நிலையான சைக்கிள் பந்தயம் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட வயதுப் பிரிவு. தனிப்பட்ட நேர சோதனைகள் உட்பட, பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி 118 புள்ளிகளுடன் ஒட்டமொத்த சாம்பியன் பட்டத்தினை பெற்றுக்கொண்டதுடன் இலங்கை சிங்க படையணி 28 புள்ளிகளுடன் இராண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. குறிப்பிடத்தக்க தனிப்பட்ட நிகழ்ச்சியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சிப்பாய் ஏடிஎஸ் பெரேரா, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி லான்ஸ் கோப்ரல் ஏடி மாரப்பெரும மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஆர்.எம். பெர்னாண்டோ ஆகியோரின் திறமைகள் பாராட்டப்பட்டன.