நேபாள இராணுவத் தளபதிவர்களுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள்
22nd January 2018
இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட தேபாள இராணுவத் தளபதியான (COAS) ஜெனரல் ராஜேந்திர சேத்திரி மற்றும் அவரது பாரியார் உள்ளடங்களான பத்து இராணுவத்தினர் மற்றும் சிவில் குழுவினர் (21)ஆம் திகதியன்று நேபாளத்திற்கான தமது விஜயத்தை இரவு வேளையில் மேற்கொள்ள தயாராகினர்.
அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்ற சந்திப்பில் இராணுவ சேவா வணிதாவின் தலைவியம் இராணுவத் தளபதியவர்களின் பாரியாருமான திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க தேபாள இராணுவத் தளபதியான ஜெனரல் ராஜேந்திர சேத்திரி மற்றும் அவரது பாரியாரான திருமதி ரிட்டா சேத்திரி போன்றோர் கொழும்பு விடுதியில் இடம் பெற்றது.
அத்துடன் இராணுவத் தளபதியவர்களால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட நேபாள ஜெனரல் அவர்களின் சுற்றுப் பயண புகைப்படக் கோவை அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வாறு பயணத்தை மேற்கொண்ட நேபாள இராணுவத் தளபதியவர்கள் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவயர்கள் பாதுகாப்புச் செயலாளர் முப்படைத் தலைமையகங்கள் மற்றும் இராணுவ முல்லைத் தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் திருகோணமலையில் உள்ள 22 ஆவது படைத் தலைமையகங்களுக்கான பயணத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில் பிரதிப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் இவர்களை விமான நிலையத்திற்கு வழிஅனுப்பி வைத்தார்.
|