இராணுவத் தலைமையகத்தின் தலைமைய சார்ஜன்ட் மேஜர் அவர்களின் பிரியாவிடை
20th January 2018
69 வருட காலமான வரலாற்றைக் கொண்ட இராணுவமானது அதன் படைத் தலைமையகத்தில் கிட்டத் தட்ட மூன்று வருட காலமாக சேவையாற்றிய தலைமைய சார்ஜன்ட மேஜர் அவர்களின் சேவை ஓய்வூ நிகழ்வானது கடந்த வெள்ளிக் கிழமை (19)இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
அந்த வகையில் வெள்ளிக் கிழமையன்று பனாகொடையில் அமைந்துள்ள 6ஆவகு இலங்கை படைக் கலச்சிறப்பணி தலைமையகத்தில் இவ் தலைமைய சார்ஜன்ட் மேஜர் அவர்களின் சேவை ஓய்வூ நிகழ்விற்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை 24 இராணுவத் தலைமையகங்கள் உள்ளடங்களாக 624 படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
அந்த வகையில் இத் தலைமைய சார்ஜன்ட் மேஜர் அவர்களின் சேவை ஓய்வை முன்னிட்டு 24 இராணுவத் தலைமையகங்களை உள்ளடக்கி இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது.
இவ்வாறு அணிவகுப்பு மரியாதை நிகழ்வூ இடம் பெறும் மைதானத்திற்கு வருகை தந்த தலைமைய சார்ஜன்ட் மேஜர் ஐ ஏ எச் எம் என் ஜயரத்தின அவர்களை தியத்தலாவை இலங்கை இராணுவ அக்கடமியின் இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த தலைமைய சார்ஜன்ட் மேஜர் ஆன ஐ டபிள்யூ+ பீ என் சி மென்டிஸ் அவர்கள் வரவேற்றார்.
அந்த வகையில் சேவை ஓய்வூ பெறும் தலைமைய சார்ஜன்ட் மேஜர் ஐ ஏ எச் எம் என் ஜயரத்தின அவர்களுக்கான அணிவகுப்பு மரியாதையில் அணிவகுப்பு தளபதியாக இலங்கை படைக் கலச்சிறப்பணியின் தலைமைய சார்ஜன்ட் மேஜர் ஐ டபிள்யூ எம் வீரசிங்க மற்றும் அணிவகுப்பு ஆலோசகரான இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தலைமைய சார்ஜன்ட் மேஜர் ஐ எம் எல் லொக்குலியனகே அவர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
இந் நிகழ்வின் இறுதியில் ஓய்வூ பெறுமை தலைமைய சார்ஜன்ட் மேஜர் அவர்களால் இப் படையினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் தனது 3 வருட கால சேவையில் (2015-2018) வரை தமது சேவையில் ஒத்துழைத்த படையினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் பனாகொடை கோப்பிரல் கழகத்தில் தேநீர்விருந்துபசாரமும் இடம் பெற்றது.
அந்த வகையில் இந் நிகழ்வில் ஓய்வூ பெறுமை தலைமைய சார்ஜன்ட் மேஜர் அவர்களின் துனைவியாரான திருமதி ஐ ஏ எச் எம் என் ஜயரத்தின அவர்களும் கலந்து கொண்டதுடன் இவரது கடமைப் பொறுப்பை இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தலைமைய சார்ஜன்ட் மேஜர் ஐ டபிள்யூ எம் எஸ் பி விஜேசிங்க அவர்கள் பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் (19) மாலை வேளை ஏற்றார்.
இந் நிகழ்வில் புதிதாக சேவைப் பொறுப்பை ஏற்ற தலைமைய சார்ஜன்ட் மேஜர் அவர்களின் கடமைப் பொறுப்பு நிகழ்வில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இத் தலைமையக சார்ஜன்ட் மேஜர் அவர்களின் 25 வருட கால இராணுவ சேவையை முன்னிட்டு (19) மதியம் சந்தித்து அவரது சேவைக்கான பாராட்டையூம் தெரிவித்துள்ளார். அத்துடன் இவரது சேவையைப் பாராட்டும் நோக்கில் பரிசில்களை வழங்கி வைத்த இராணுவத் தளபதியவர்கள் அவரது குடும்பத்தாரிற்கும் நன்றிகளையூம் வாழ்த்துக்களையூம் தெரிவித்துள்ளார்.
|