வவுனியா தேசிய இரத்த மாற்று சேவையகத்தினால் 56 வது காலாட் படைபிரிவின் இரத்த தான நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு

30th July 2024

வவுனியா பொது வைத்தியசாலையின் தேசிய இரத்தமாற்ற சேவையின் இரத்த வங்கியானது 2024 ஜூலை 24 ஆம் திகதி உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்காக 56 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வவுனியா பிரதேசத்தில் பல இரத்த தானப் நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்குபற்றியதோடு, இரத்தம் ஏற்றும் பிரிவுக்கு பல பைண்ட் இரத்தத்தை வழங்கியுள்ளனர்.

56 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, கேணல் பொது பணி கேணல் ஆர்எஸ்சி திசாநாயக்க ஆர்எஸ்பீ, சிவில் விவகார அதிகாரி இலங்கை கவச வாகன படையணி லெப்டினன் கேணல் கே. ஜெயவீர ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.