கம்பஹா மாவட்டங்களில் அனர்த்த பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

15th January 2018

கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலுபிடிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 கிராமசேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த தினங்களில் ஏற்பட்ட சூறாவளி காலநிலை நிமித்தம் அனர்த்தங்களில் பாதிப்படைந்த மக்களுக்கு இயற்கை அனர்த்த மத்திய நிலையம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த (12) ஆம் திகதி வௌளிக் கிழமை மேல் மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி நிமித்தம் பாதிப்படைந்திருந்த வீதிகள் சுத்தப்படுத்தல், மின்கம்பிகளை சீர்திருத்தல், வீழ்ந்திருந்த மரங்களை அகற்றுதல், தற்காலிகமாக வீடமைத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு விடுத்த பணிப்புரைக்கமைய இந்த பணிகள் இடம்பெற்றன.

14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரெல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

14 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 8 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 2 (தொண்டர்) இலங்கை இராணுவ சேவை படையணி மற்றும் 141 ஆவது படைத் தலைமையக படையினரால் திக்லந்த, கடுகெந்த, சிரிகன்வத்த, அலுகொல்ல, அகுலேகெதர, மெல்லவகெதர, கீரலுகெதர, பெதிகொட, பொல்கேன, தம்மிட, குடகம்மான, கேகவத்த, வரந்தால, பகலமடிதியபவெல, உல்லபொல,தலமடிதியவெல, குனுமுல்ல, கலுமட மற்றும் தெல்வகுர போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 661 க்கு அதிகமான வீடுகளை திரும்பவும் சீரான நிலைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அனர்த்தங்களினால் கடும் பாதிப்புக்கு உள்ளான அலுகொல்ல, மல்லவகெதர, திக்லந்த, கடுகெந்த, கிரலுகெதர மற்றும் கிரிஉல்ல போன்ற பிரதேசங்களில் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரெல்ப் நுகேரா அவர்களது தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

|