படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபாடு
13th January 2018
இயற்கை அனர்த்தம் காரணமாக திடீர் என மேற்கு மாகானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (12) மாலை வேளை ஏற்பட்ட சூராவெளி காரணமாக மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட கடுகெந்த மற்றும் டிக்லந்தை பிரதேசங்களின கிட்டத் தட்ட 50 இராணுவப் படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்போடு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் இவ்வாறான மீட்டுப் பணிகளுக்கான முழு ஒத்துழைப்பையும் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கி வைத்தனர்.
அத்துடன் படையினர் வீதிகளை சுத்திகரித்து கடும் காற்றினால் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
|