மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினர் பயணம்
10th January 2018
ஐக்கிய நாடுகள் சபையின் மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக மற்றுமோர் இலங்கை இராணுவ படையினர் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்காக (9) ஆம் திகதி தமது பயணத்தை மேற்கொண்டனர்.
10 படையணிகளை கொண்ட 200 இராணுவத்தினரை உள்ளடக்கிய இந்த படையணியினர்களில் 150 இராணுவ வீரர்கள் ஒரு வருட காலத்துக்கு இந்த பணிகளின் நிமித்தம் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தமது பயணத்தை மேற்கொண்டார்கள். மிஞ்சிய இராணுவ வீரர்கள் ஐக்கிய நாட்டின் உத்தரவின் பேரில் (9) ஆம் திகதி தமது பயணத்தை.
மேற்கொண்டார்கள்.இவர்ளை வழியனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு இராணுவ உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
|