பாகிஸ்தான் இராணுவ பிரதிநிதிகள்இலங்கை இராணுவ லாஜிஸ்டிக் கல்லூரியின்கட்டளை அதிகாரியை சந்திப்பு

9th January 2018

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவலாஜிஸ்டிக் கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் உயரதிகாரியான பிரிகேடியர் காஷிப் ஜாபர் தலைமையிலான பாக்கிஸ்தான் இராணுவ பிரதிநிதிகள் இக்கல்லூரியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் தீபால் வன்னியாரச்சியை சந்தித்தனர்.

இருவர்களது இந்த சந்திப்பின் போது முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டன.

இந்த அதிகாரி (8) ஆம் திகதி திங்கட் கிழமை இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களை இராணுவ தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவலாஜிஸ்டிக் கல்லூரியில் இந்த அதிகாரிகளுக்கு அபிவுருத்தி மற்றும் பாதுகாப்பு விநியோகம் தொடர்பாக விரிவுரை விளக்கம் அளிக்கப்பட்டன அதனை தொடர்ந்து இந்த அதிகாரிகள் குழு புகைப்படத்தில் இணைந்திருந்தனர்.

இந்த அதிகாரிகள் (8) ஆம் திகதி மாலை 22 அவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

|