கிளிநொச்சி படையினரால் ' மீண்டும் நாம் எழுந்து முழுமையாக்குவோம்’ எனும் தலைப்பில்தேசிய உணவு உற்பத்தி நிகழ்வு
8th January 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மரக்கறி செய்கை திட்ட நிகழ்வொன்று வௌளி கிழமை (5) ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்விற்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல்ஜகத் குணவர்தன அவர்களது அழைப்பிதலை ஏற்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.
' மீண்டும் நாம் எழுந்து முழுமையாக்குவோம்’என்ற கருத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் தற்போதைய தேசிய உணவு பரிமாற்றத்துடன் இணைந்து கார்போனிக் உரத்தை பயண்பத்தி மரக்கறி மற்றும் காய்கறிகளை வளர்ச்சியடைய செய்யும் நடவடிக்கை பணிகளை மேன்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
சில மாதங்களுக்கு முன்னர் இக் கருத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு 125,000க்கும் அதிகமான தென்னங் கன்றுகள் மற்றும் ஏனைய பொருட்கள் இராணுவத்தினரால் விநியோகிக்கப்பட்டன குறிப்பிடதக்க விடயமாகும்.
இந்த நிகழ்விற்கு படைத் தலைமையக கட்டளை அதிகாரிகள், படையணி கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.
|