முல்லைத்தீவு இராணுவ கட்டுப்பாட்டு வீதி மக்கள் பாவனைக்காக விடுவிப்பு
2nd January 2018
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கடந்த தினங்களில் கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இருந்து இடங்கள் விடுவிக்கப்பட்டன அதனை தொடர்ந்து ஜனவாரி முதலாம் திகதி புதுக்குடியிருப்பு மற்றும் வற்றாப்பளை வீதிகள் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாதை திறப்பு நிமித்தம் பொது மக்களுக்கு வசதிகள் கிடைப்பதோடு, இந்த காணிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் கிடைக்க பெற்றுள்ளன.
நீண்ட காலங்களுக்கு பின்னர் இந்த 2km நீண்ட சாலை பாதைகள் சமாதானம் மற்றும்நல்லிணக்கத்தை மேன்படுத்தும் நோக்கத்துடன் திறந்து வைக்கப்பட்டது. அதே தினத்தில் பக்தர்கள் ஒன்றினைந்து முல்லைத்தீவு கொட்டடி பிள்ளையார் கோவிலில் பூஜை நிகழ்வுகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிகழ்த்தினர்.
|