இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த கட்டிடம் அரசாங்கத்திடம் கையளிப்பு
31st December 2017
கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் பின் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் கூலியடிப்படையில் பெற்று கிளிநொச்சி நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ‘அன்டனி பிள்ளை’ கட்டிடம் வியாழக்கிழமை (28) ஆம் திகதி வடமாகாண ஆளுனராகிய ரெஜினோல்ட் குரே அவர்களுக்கு இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பின்பு அதிகாரபூர்வமாக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமானகூலியடிப்படையில் பெற்று பராமரித்து வந்த இந்த கட்டிடம் பொது மக்கள் மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பு அலுவலமாக இயங்கி வந்தது.
தனியார் இடம் மற்றும் சொத்துக்கள் அதிகாரபூர்வமாக உரிமையாளர்களுக்கு கையளிப்பது அரசின் கொள்கைகளாகும் இதற்கமைய இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இந்த காணி கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் மேற்பார்வையில் கையளிக்கப்பட்டது.
இந்த காணி பத்திரங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமை புரியும் பிரிகேடியர் குமார ஹந்துன்முல்ல அவர்களினால் ஆளுனருக்கு கையளிக்கப்பட்டது.
|