சாவகச்சேரியில் இடம் பெற்ற பிரமாண்டமான நத்தார் கரோல் நிகழ்வுகள்

26th December 2017

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்; 52ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும்523ஆவது படைப்பிரிவின் 4ஆவது விஜயபாகுகாலாட் படையணி மற்றும் 12ஆவது கெமுனு ஹேவா படையணியும் இணைந்து நத்தார் தினத்தை முன்னிட்டு சிறப்பான நத்தார் கரோல் பாடல்களின் இசை நிகழ்ச்சியை கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமையாழ் சாவகச்சேரி பிரதேசத்தில் இந்தியா தேவாலய வளாகத்தில் நடத்தினர்

இந்த நிகழ்வில் பல பாடசாலைகளின் மாணவர்களும் கலந்த கொண்டு மூன்று மொழிகளிலும் நத்தார்; கரோல் பாடல்களை பாடினர். இந்த சந்தர்ப்பத்தில் 523ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டிகிரி திசாநாயக மற்றும் கத்தோலிக்க பாதரியார்களும் விஷேட விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வின் கடைசியில் 523ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களினால் நத்தார்;; நிகழ்வில் கலந்த கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதை> தொடர்ந்து நத்தார் தாத்தாவினால் வருகைதந்த குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பரிசுகளும் விழையாட்டு பொருட்களும் வழங்கப்பட்டது.

|