வெல்வெட்டிதுறையில் இடம் பெற்ற நத்தார் கரோல் நிகழ்வுகள்

26th December 2017

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52ஆவது படைப்பிரிவின் 1ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் இணைந்து நத்தார் தினத்தை முன்னிட்டு சிறப்பான நத்தார் கரோல் பாடல்களின் இசை நிகழ்ச்சியை கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமை யாழ் வெல்வெட்டிதுறை பிரதேசத்தின் CSI தேவாலய வளாகத்தில் நடத்தினர்.

இந்த நத்தார் கரோல் கீத இசை நிகழ்வை 1ஆவது விஜயபாகு காலாட் படையணியினர் மற்றும் தேவாலயத்தின் நத்தார் கரோல் குழுவினர் இணைந்து நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து அருட்தந்தையான ஜெசி பிரதீப்குமார் மற்றும் ரல்ச் சொலமன் சகோதரர்களினால் சமய வழிப்பாடு பூஜையும் இடம் பெற்றது.

52ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் அருண வன்னியாராச்சி, யாழ் பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிஸ்து 1 தேவாலயத்தின் மத தலைவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் இறுதியில் நத்தார் நிகழ்வில் கலந்த கொண்ட அனைவருக்கும், வருகை தந்த குழந்தைகள், சிறுவர்கள் 80 பேர்களுக்கும் நத்தார் தாத்தாவினால் பரிசும் விழையாட்டு பொருட்களும் வழங்கினார்.இந்த பரிசு தொகையானது 52ஆவது படைப்பிரிவின் படையினர் மற்றும் அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்தோடு இப் பிரதேசத்தின் உள்ள குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நத்தார் கரோல் கீத இசை நிகழ்வு நடத்தப்பட்டது.

521ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி மற்றும் 1ஆவது விஜயபாகு காலாட் படையனியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல்.டிடி.டி.ஜயரத்ன 22ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி எம்.எம்.எல்.பி சமரகோன் 521ஆவது படைப்பிரிவின் சிவில் சம்மந்த அதிகாரி மற்றும் வெல்வெட்டதுறை பொலிஸ் தலைமையகத்தின் விசாரணையாளர்களும் கலந்து கொண்டார்கள்.

|