இராணுவ தளபதியின் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்
26th December 2017
உலகம் முழுதும் கொண்டாடும் நத்தார் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் உட்பட இராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும்இ, ராணுவ படையினரும், சிவில் ஊழியர்களும் நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
இராணுவத் தளபதியவர்களின் நத்தார் வாழ்த்துக்கள்
அனைத்து உலகிலும் நத்தாரைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருடனும் இணைந்து நத்தார் தினத்தை கொண்டாட முற்படும் இலங்கை இராணுவத்தின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
சமாதானத்தின் குமாரனாக அனைத்து கிறிஸ்தவ பக்தர்களின் கௌரவத்திற்குறிய இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பானது வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்த வகையில் சுவர்கத்திலும், பூமியிலும் மட்டுமன்றி இயற்கையும் இயேசுவின் பிறப்பை களிகூர்ந்து கொண்டாடுகின்றதுடன், அவரது பிறப்பானது மாட்டுத் தொழுவத்தில் அமைவதுடன் ஏழை பணக்காரர் அனைவருக்கும் சமாதானத்தை உருவாக்குவதாக அமைகின்றது. அந்த வகையில் அனைத்துலக மக்களுக்கும் அமைதியையும் சமாதானத்தையும் மற்றும் நல்லிணக்கத்தையும் உருவாக்க தம்மை அர்ப்பணித்த இயேசு பிராணின் பிறப்பை கொண்டாடும் இந் நத்தார்ப் பண்டிகை நல்லதோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அனைவரிடத்திலும் அன்பு கூறுங்கள் என்பதே இயேசு பிராணின் பிரதானமான போதனையாகும். அதற்கமைய அப் பிராணின் ஜாதி, மதம், குலம், நிறம் போன்ற அனைத்து மனிதனது வேறுபாடுகளையும் கடந்து அனைவருக்கும் ஒரே விதமாக வழிநடத்தியதுடன் நிரந்தரமான சமாதானமானது அனைத்துலகிற்கும் நிலவுவதைப் பற்றி எடுத்துக் காட்டினார். சகோதரத்;துவத்துடன் ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதை எடுத்துக்காட்டும் இந் நத்தார்ப் பண்டிகையானது இலங்கைப் பிரஜைகளாகிய நமக்கு மிக முக்கியமானதாகும்.
அதற்கமைய ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒத்துழைப்புடன் ஒன்றினைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப பிரஜைகளாகிய உங்களது ஒத்துழைப்பு முக்கியமானதாகும். நாட்டின் எதிர்காலத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வழங்குமாறு நான் இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன். இந் நத்தார் பண்டிகையானது உலகத்தார் அனைவருக்கும் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துடனான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் இனிய நத்தார்ப் பண்டிகையாக அமைய எனது வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவருக்கும் அமைதியையும் சந்தோசத்தையும் அளிக்கின்ற நத்தாராக அமையட்டும்.
|