பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா
15th December 2017
முப்படை அதிகாரிகளுக்காக பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 11 ஆவது பட்டமளிப்பு விழா சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேட்போர்கூடத்தில் (13) ஆம் திகதி இடம்பெற்றது.
கல்லூரியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களது அழைப்பையேற்று இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்தார்.
மேலும் இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.கபில வைத்தியரத்ன, அவர்களும்கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 65 அதிகாரிகளும், கடற்படையைச் சேர்ந்த 23 அதிகாரிகளும் விமானப்படைச் சேர்ந்த 26 அதிகாரிகளும் பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சூடான், அமெரிக்கா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரியும் தமது கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான தமது பட்டத்தினை பெற்றுக்கொள்கின்றனர்.
முன்னர் இருந்த இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியானது 1998ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டது. இராணுவ கோட்பாடு மற்றும் மூலோபாய நிலையை கற்பிப்பதன் ஊடாக முப்படையினரின் சேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும்வகையில் 2007ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இம்மாற்றம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், அமைச்சின் அதிகாரிகள் வெளிநாட்டு அதிதிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
|