இராணுவ பயிற்ச்சிகளை நிறைவு செய்த புதிய சமூர்த்தி அதிகாரிகள்

13th December 2017

சமூக நலன்புரி கண்டி உடரட்ட அமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சமூர்த்தி அதிகாரிகளுக்கென இராணுத்தினரின் தலைமையில் தலைமைத்துவப் பயிற்ச்சிக்கான கருத்தரங்குகள் கடந்த திங்கட் கிழமை (11) இராணுவ பயிற்ச்சி மையங்களில் இடம் பெற்றது.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 1904 சமூர்த்தி அதிகாரிகள் உள்ளடங்களாக 1521 பெண் அதிகாரிகளின் பங்களிப்போடு கிட்டத் தட்ட 19நாட்கள் உள்ளடங்களான இப் பயிற்ச்சிப் பட்டறையில் தலைமைத்துவ நேர்மறை அணுகுமுறை மற்றும் ஒழுக்கப்பயிற்ச்சி எனும் கருப்பொருளில் இப் பயிற்சிப் பட்டறை இடம் பெற்றது.

அதே வேளை கடந்த செவ்வாயக் கிழமை (5) மின்னேரிய காலாட் படையணிப் பயிற்றுவிப்பு மையத்தில் (ITC) இடம் பெற்ற இக் கருத்தரங்கில் முப்படைகளின் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பங்கேற்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது சமூக நலன்புரி அமைச்சின் மதிப்பிற்குறிய அமைச்சர் எஸ் பி திசாநாயக்க அவர்கள் மற்றும் சில சமூர்த்தி உயர் அதிகாரிகள் போன்றௌர் கிட்டத் தட்ட 14 நாட்களாக இடம் பெற்ற இக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இக் கருத்தரங்கானது இராணுவத் தளபதியவர்களின் நாட்டின் நல்லிணக்கத்திற்கான ஒன்றிணைந்து செயல்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவிற்கமைவாக இக் கருத்தரங்குள் இடம் பெற்றன.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் கண்டி உடரட்ட நலன்புரி அமைப்பிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க பாதுகாப்பு அமைச்சு மற்றம் இராணுவ பயிற்றுவிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் ஒருங்கிணைப்போடு இக் கருத்தரங்கு இடம் பெற்றது.

இவ்வாறான கருத்தரங்குகள் பல இராணுவ பயிற்றுவிப்பு மையங்களில் இடம் பெற்று சான்றிதழ்கள் வழங்கும் விழாவூடன் நிறைவுற்றது.

ஆந்த வகையில் அம்பாரையில் உள்ள இராணுவ போர் பயிற்சிப் மையத்தில் சான்றிதழ்கள் வழங்கும் விழாவானது இம் மையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பி ஏ டீ கஹபொல அவர்களின் தலைமையில் பல உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் கலாஓயா இராணுவ தொழிற்ப் பயிற்சிப் மையத்தில் (CAVT) சான்றிதழ்கள் வழங்கும் விழாவானது இம் மையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ரண்துல்ல ஹந்தனாகொட அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

|