உணவுகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் இராணுவத்திற்கு முதலிடம்
13th December 2017
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான'கொழும்பில் கடல் உணவு விழா’(8) ஆம் திகதி வௌளிக் கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் இடம்பெற்றது. இந்த வளாகத்தினுள்இராணுவ முகாமைத்துவ 'லயா பீச்' ஹோட்டலினால் உணவு கூடாரம் அமைக்கப்பட்டு சிறப்பாண உணவு தேர்ந்தெடுக்கம் போட்டிகளில் இலங்கை இராணுவம் பங்கேற்றிக் கொண்டது.
இந்த நிகழ்வில் இராணுவம் பங்கு பற்றி முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது .
இந்த நிகழ்விற்கு மீன்பிடி துறை அமைச்சர் கௌரவத்திற்குரிய. மகிந்த அமரவீர அவர்களின் அழைப்பையேற்று மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கடல் உணவு சுவையுடனும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு விளங்கியது,
இவற்றில் பல்வேறுபட்ட உணவு வகைகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த உணவு பண்டிகை கொழும்பில் ஒரு புதிய சுற்றுச்சூழலைக் கொண்டுவருவதற்கான வழிவகையாக விளங்கியது.
இந்த நிகழ்வில்.இடம்பெற்ற சமையல் போட்டிகளில் வெற்றீயீட்டிய இராணுவ முகாமைத்துவத்திற்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீன்பிடி வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சான்றிதழ் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கினார்கள்.
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் சிறந்த ஹோட்டலாக ‘லயா’இலங்கையில் விளங்குகின்றது. ஓய்வு நேரங்களில் பொழுது போக்கைகழிப்பதற்கான சிறந்த இடமாக விளங்குகின்றது.
இலங்கையில் லயா ஹோட்டல் 4முக்கிய விடுதிகளை கொண்டுள்ளது. இவைகள்லயா பீச் ஹோட்டல், லயா சஃபாரி ஹோட்டல், லயா வேவ் ஹோட்டல் மற்றும் லயா லீஷியா ஹோட்டல் என்வெவ்வேறு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
வாதுவையில் அமைந்துள்ள லயா பீச், சூரிய, கடல், மணல் போன்ற அமைப்புடன் அமைதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்ஹோட்டலானது வார விடுமுறைகளில் தனியார் மற்றும், நிறுவனத்தினரது வருகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
|