ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு
11th December 2017
இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க துhதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இன்று காலை (11) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன் போது இவ்விரு அதிகாரிகளுக்குமிடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போது தமது சேவையின் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இராணுவ பயிற்ச்சிப் பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களும் கலந்து கொண்டார்.
|