பாதுகாப்பு சேவை கல்லூரியின் நீச்சல் போட்டிகள் ஆரம்பம்

11th December 2017

கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியின்பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல்போட்டிகள் (9) ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

இப்போட்டிகள் கல்லூரி அதிபரான திருமதி தம்மிக ஜயநெத்தியின் ஒழுங்கமைப்பில்இடம்பெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதிலெப்டினன்ட்ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து தேசிய கீதத்துடன் இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

84 பாடசாலைகளை பிரதிநிதித்துவ படுத்தி 1000 மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் 9,10 ஆம் திகதிகளில் இப்போட்டியானது இடம்பெற்றது.

இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

இந்நிகழ்வு கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெறும்.

|