இராணுவத்தினர் புதுகுடியிருப்பு பிரதேச சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

11th December 2017

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 682ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 11ஆவது இலங்கை இராணுவ பொறியியளாலர் படையினர் புதுகுடியிருப்பு மகா வித்தியாலயத்தின் அருகில் அமைந்துள்ள நீர்க் குழாய்களை மீள் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களால் 682 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் என்.டி.ஜீ ஹேவகே அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இச் சுத்திகரிப்பு பணிக்கான திட்டம் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

|