இராணுவ வீரரின் மரணச் சடங்கிற்கு நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் உறவு ரீதியாக பங்கு பற்றிய மக்கள்

11th December 2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு டவுன்சொப் பிரதேச முகாமில் கடமை புரியும் இராணுவ வீரனான லான்ஸ் கோப்ரல் ஆர்.எம். குமார வாகன விபத்தில் (8) ஆம் திகதி வௌளிக் கிழமைஅகால மரணமானார்.

இவர் முல்லைத்தீவு நகரத்தின் மக்களுடன் நல்லெண்ணம்,ஒத்துழைப்பு மற்றும் உறவு முறைகளுடன் பழகியுள்ளார்.

படை வீரர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரிந்தவர்., புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவில் உள்ள மக்களுடன் பரஸ்பர உறவுகளை மேம்படுத்தி, அவர்களின் இதயங்களை வென்று அவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார்.

இவரது மரண செய்தியை கேட்டு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் மரண வீட்டிற்கு வந்திருந்தனர்.இவர் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நண்பராக விளங்கியுள்ளார்.

இராணுவ வீரனது மரணத்தை தொடர்ந்து முல்லைத்தீவு பிரதேச மக்கள் இவரது மரண சடங்கிலும் கலந்து கொண்டு இரங்கல் செய்திகளை பிரச்சார விளம்பரங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

காலஞ் சென்ற லான்ஸ் கோப்ரல்ஆர்.எம். குமார 37 வயதைச் சேர்ந்தவரும் இவர் நாவலப்பிட்டிய, ஹப்புகஸ்தல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் இவரது இறுதிச் மரண சடங்கிற்காக இராணுவ படைகளை அஞ்சலி செலுத்துவதற்காக அனுப்பியுள்ளார்.

|