பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு இராணுவ தளபதி விஜயம்
10th December 2017
சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களின் அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக்கிழமை (7) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவ தளபதியை பாதுகாப்பு சேவை கட்டளை அதிகாரி வரவேற்றார்.
பின்பு இராணுவ தளபதியினால் பயிற்சியை மேற்கொள்ளும் படை அதிகாரிகளுக்கு உறைநிகழ்த்தினார்.
மாணவர்களுக்கான ஒரு மணி நேர உரையாடலின் போது 'வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்து உள்நாட்டு இராணுவ பங்காளித்தனத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஐக்கியம்' பற்றி இராணுவத்தின் தளபதி விளக்கி கூறினார்.
அத்துடன் பயிற்சியை மேற்கொள்ளும் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர். பின்பு இராணுவ தளபதியினால் பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.
இறுதியில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களினால் இராணுவ தளபதிக்கு நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.
|