மாதுருஓயா இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் இடம் பெற்ற கருத்தரங்கு
8th December 2017
மாதுருஓயாவின் இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் தீவிரவாத தற்கால நிலைமை மற்றும் சாவல்கள் எனும் தலைபைபின் கீழ் இரண்டாம் கட்ட கருத்தரங்கானது கடந்த வியாழக் கிழமை (7) இடம் பெற்றது.
இரு நாட்களாக இடம் பெற்ற இக் கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் மாதுருஓயாவின் இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த செனவிரத்தின அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க கலந்து கொண்டார்.
இக் கருத்தரங்கில் 52 அதிகாரிகள் உள்ளடங்களாக 47 இராணுவ அதிகாரிகள் 5 கடற் படை அதிகாரிகள் இ இலங்கை விமானப் படையின் ஒர் அதிகாரி மற்றும் விசேட பாதுகாப்புப் படையின் இரு அதிகாரிகள் வீதம் கலந்து கொண்டனர்.
இதன் போது 17 இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் இவ் இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டதுடன் இதன் போது பலவாறான வினாக்களும் விடைகளும் விளக்கத்துடன் இவர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில் இராணுவ பயிற்ச்சி நிலையமானது இராணுவ அதிகாரிகள் மட்டுமன்றி வெளிநாட்டு அதிகாரிகளுக்குமான இவ்வாறான தீவிரவாத தற்கால நிலைமை மற்றும் சாவல்கள் எனும் தலைபை;பின் கீழ் பலவாறான கருத்தரங்குகளை நிகழ்த்தி வருகின்றது.
இக் கருத்தரங்கான இராணுத் தளபதியன லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக் கிணங்க இராணுவ பயிற்சிகள் பணிப்பகத்தின் உதவியோடு இக் கருத்தரங்கு மிகவும் வெற்றிகரமான முறையில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட மத்தியதர அதிகாரிகளுக்கான கருத்தரங்கின் போது எதிர் நோக்கப்படுகின்ற மற்றும் அவற்றை எதிர் நோக்குகின்ற / கைக் கொள்கின்ற விதங்கள் பற்றி விளக்கப்பட்டது.
|