புத்தங்களை பௌத்த ஆரண்ய சேனாசனய புணிததந்த கண்காட்சி இராணுவ தளபதியினால் திறந்துவைப்பு
10th June 2017
பொசன் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை ஆரண்ய சேனாசனய கண்காட்சிகள் வெள்ளிக்கிழமை (09) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பூஜ்ய தீகவாபிய சுசிம சுவாமி மற்றும் புத்தங்கள ஆனந்த சுவாமி தேரர்களின் அலைப்பின் பேரின் இராணுவ தளபதி இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அதற்கும் மேலாக இராணுவ படையினரினால் நிர்மாணிக்கப்பட்ட 4 புத்தசிலைகள் இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே மற்றும் அம்பாறை காலாட்படை பயிற்சி நிலையத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக இம்மத பூஜையில் கலந்துகொண்டனர்.
வருடாந்தம் இடம்பெறும் பொசன் பண்டிகையானது (08) ஆம் திகதி கௌரவ பேச்சாளர் கருஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
|