மாலி நாட்டின் கட்டிட வேலைப்பாடுகளை நிறைவு செய்த படையினர் மீண்டும் நாடு திரும்பினர்

5th December 2017

கிட்டத் தட்ட 6 மாத கால கட்டிட வேலைப்பாட்டு சேவைகளை ஐக்கிய நாடுகளின் பரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக மாலி நாட்டிற்கு விஜயம் செய்த அப் பணிகளை நன்கே நிறைவு செய்த இலங்கை இராணுவப் பொறியியலாளர் சேவைப் படையணியைச் சேர்ந்த 53 சாதாரணப் படையினர்இன்று அதிகாலை (5) தமது இல்லத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்த படையினரை இலங்கை இராணுவப் பொறியியலாளர் சேவைப் படையணியின் கேர்ணல் கெமடான்ட் மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் இப் படையணியின் சென்டர் கெமடான்ட் கேர்ணல் ஆர். கணேகொட போன்றோரால் வரவேற்ககப்பட்டனர்.

அன்மையில் டிசெம்பர் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் அமைதி; காக்கும் நடவடிக்கைப் பணிக்காக விஜயம் செய்யவுள்ள இலங்கை இராணுவப் போர்க் கருவிப் படையினரின் தேவையான தங்குமிட வசதிகள் இ மலசலகூட வசதிகள் மற்றும் பல கட்டிட வேலைப்பாடுகளை நிறைவூ செய்த பின்னர் இப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் இராணுவத்தின் 200 படையினர் ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் இலங்கை இராணுவப் போர்க் கருவிப் படையினர் நிலச்சரிவு மோதல்களினால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆபிரிக்காவின் நமாதான நடவடிக்கைகளை நிலைநாட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் சேவைப் பணிகளுக்காக அண்மையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அந்த வகையில் மாலி நாட்டின் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக விசேட குழுக்களாக வேறாக்கப்பட்டு இராணுவப் படையினர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் 7ஆவது பயிற்றுவிப்பில் சமாதான நடவடிக்கைகளுக்காக கிட்டத் தட்ட ஒரு வருட காலம் இப் படையினர் தமது விஜயத்தை டிசெம்பர் மாதம் நடுப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளனர்.

அந்த வகையில் இப் போர்க் கருவிப் படையினரின் 10 தலைமையகங்களை முன்னிலைப்படுத்தி 16 இராணுவ அதிகாரிகள் மற்றும் 184 இராணுவ சாதாரணப் படையினர் கலந்து கொள்வதுடன் இப் படையின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் கலண அமுனுபுரே அவர்கள் காணப்படுகின்றார்.

மேலும் மாலி நாட்டிற்கு விஜயத்தை மேற்கொள்ளவூள்ள இராணுவப் படையினருக்கான அணிவகுப்பு மரியாதை பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலட் படையணித் தலைமையகத்தில் இடம் பெற்றது.

|