படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபாடு

2nd December 2017

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மீட்புப் பணிகளில் 500ற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களான படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் களுத்தரை மாவட்டத்தின் பண்டாரகம ,மில்லேனிய ,வல்லலாவிட்ட ,பேருவல ,களுத்தரை ,ஹொரண போன்ற பிரதேசங்களில் 40 இராணுவப் படையினர் 10 குழுக்கள் வீதம் மின்சார திணைக்களத்துடன் இணைந்து மின்சார புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட 58ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் ஆலோசனைக்கமைய 582ஆவது படைப் பிரிவின் 9ஆவது இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையினர் மின்சார திணைக்களத்துடன் இணைந்து பாதிப்பிற்குள்ளான வீதிகளைச் சீர்திருத்தல் மற்றும் சுத்திகரிப்புப் பணிகளை களுத்தரை மாவட்டத்தில் கடந்த சனிக் கிழமை (02) மேற்கொண்டனர்.

மேலும் 582ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சமரகோன் அவர்களது கூர்ந்த கண்காணிப்பின் கீழ் 9ஆவது இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பிரசன்ன கருணாநாயக்க போன்றௌர் களுத்தரை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இவ்வாறான மீட்புப் பணித் திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இராணுத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் இவ்வாறான மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் போன்றன வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மீட்டுப் பணிகள் மற்றும் அவசர தேவைகளை வழங்கிவருகின்றது.

|