இராணுவ தளபதி மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான மொரவக மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு விஜயம்
6th June 2017
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா சிரேஷ்ட இராணுவ அதிகாரதிகளுடன் இணைந்து (05) ஆம் திகதி அதிகாலை பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மொரவக,அகுரஸ்ஸ மற்றும் மாத்தறை தெற்கு மாகாண பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
மாத்தறை பிரதேசத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி 3 ஆவது கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் பேரனர்த்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளை மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் நடத்தினார்.
மேலும் அன்றைய தினம் மாலை ஜனாதிபதியின் தலைமையில் மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவ தளபதி கலந்து கொண்டதன் பின்பு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் அகுரஸ்ஸ மற்றும் மொரவக பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு அனர்த்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் அப் பிரதேசத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளாகி பாதிப்படைந்த மக்களுடன் அவர்களது நிலைமை சம்பந்தமாக உறையாடினார்.
|