இலங்கை படையினருக்கு பதக்கம் வழங்கும் விழா
28th November 2017
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் (UNMISS) அமைப்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாம் நிலை மருத்துவமனையில் 6 மாத கால சேவையை முடித்து வைப்பதற்கான உத்தியோகபூர்வ பதக்கம் வழங்கும் நிகழ்வானது வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதிதென் சூடானில் இடம்பெற்றது.
இதில்மொத்தமாக 16 அதிகாரிகள் மற்றும் 50 இராணுவ படையினருக்குஆறு மாதகால கடமை முடிவின் பின் நாடு திரும்புவதற்கு முன்னதாக ஐ.நா. பதக்கம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ மருத்துவ சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கே.பி. சுமனபால, ஐ.நாவின் இணக்கத்தோடு பிரதான விருந்தினராக இந்நிகழ்விற்கு வருகை தந்தார்.
பிரதம விருந்தினராக வருகை தந்த மேஜர் ஜெனரல் கே.பி சுமனாபால அவர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். பின்பு இந்த நிகழ்வில் கலந்து உரையாற்றி குழுப் புகைப்படத்திலும் இணைந்திருந்தார்.
கடமை நிமித்தம் இலங்கை படையணிக்கு கட்டளை அதிகாரியாக சென்ற கேர்ணல் சித்தத் அமரசேகர அவர்களினால் படையணிகள் தங்கியிருக்கும் வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு நடாத்துமாறு மேஜர் ஜெனரல் கே.பி சுமனாபால அவர்களுக்கு விடுத்தவேண்டுகோளுக்கிணங்க அவர்களினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மதிய உணவு விருந்திலும் இவர் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கட்டளை தளபதி (கிழக்கு), புலம் நிர்வாக அலுவலர், அனைத்து கட்டுப்பாட்டு தளபதிகள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த பதக்க நிகழ்வில் பங்கேற்றனர்.
|