யாழ் படையினரால் புங்குடு தீவு பாடசாலைக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

27th November 2017

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமயகத்தினன் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படையினரால் புங்குடுதீவு மகா வித்தியாலப் பாடசாலைக்கு கடந்த சனிக் கிழமை (25) பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியன்று புங்குடுதீவு மகா வித்தியாலத்தில் கல்விகற்கும் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்திய எனும் மாணவி பாடசாலை செல்லும் போது பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இம் மாணவியின் 21ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் திருமதி சுவிநேத வீரசிங்க திரு நந்தலால் மாலாகொட திரு மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் போன்றௌரால் சைக்கில்கள் ,பாடசாலை பைகள்,காலணிகள் புத்தகங்கள் போன்ற பொருட்கள் இப் பாடசாலைக்கு வழங்கப்பட்டன.

அத்துடன் சிவலோகநாதன் வித்தியாவின் தாய்க்கும் சில நன்கொடைகள் இவர்களால் வழங்கப்பட்டன.

மேலும் திரு மோகன் சங்கர் என்பவரால் புலமைப் பரிசில்ப் பரீட்சையில் சித்தியடைந்த 10 மாணவர்களுக்கு அவர்களது மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக 2500/= ருபா வீதம் வழங்கப்பட்டது.

அத்துடன் இவரால் இப் பாடசாலை கால் பந்தாட்ட விளையாடுனர்களுக்கான கால் பந்து காலணிகளுகம் வழங்கப்பட்டன ஏனெனில் சில தினங்களுக்கு முன்னர் யாழில் இடம் பெற்ற கால் பந்தாட்டப் போட்டிகளில் புங்குடுதீவு மகா வித்தியாலப் பாடசாலையானது வெற்றிக் கிண்ணத்தைச் சூடிக் கொண்டது. எனினும் இம் மாணவர்கள் ஒழுங்கான காலணிகள் இல்லாது சிறமப்படுதலை கருத்திற் கொண்டே இவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சி இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

|