இராணுவ சேவையிலிருந்த ஓய்வு பெறும் படையினருக்கான தொழில்ப் பயிற்ச்சிகள்

25th November 2017

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சேவையிலிருந்த ஓய்வு பெறும் படையினர் தமது ஓய்வின் பின்னரும் சமூதாயத்தில் பயனுள்ள விதத்தில் காணப்படுகின்ற தொழில்களான நீர்க் குழாய்ப் பொருத்துனர் மேசன் தச்சுத் தொழில் மின்சாரவியல் மற்றும் கணினி போன்ற பலவாறான வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழில்களுக்கான பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகமானது பொலன்நறுவைப் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் அங்கீகாரமிக்க NVQதர சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இதன் போது கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனண்வெல அவர்கள் இத் தொழிற்பயிற்ச்சித் திட்டத்திற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

இப் பயிற்ச்சித் திட்டத்தில் 23இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் 25 இராணுவ அதிகாரிகள் அல்லாதவர்கள் பங்கேற்றனர்.

இப் பயனுள்ள திட்டத்தின் மூலம் இராணுச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் படையினருக்கு மேலுதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய செயற்பாடாகக் காணப்படுகின்றது.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்றுவிப்பு அதிகாரியான திரு கே ஏ எச் கே கீண்வின்னா அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.

இப் பயிற்ச்சிகளின் நிறைவில் அங்கீகாரமிக்க NVQதர சான்றிதழ்களும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந் நிகழ்வில்NAITAமாவட்ட முகாமையாளரான திரு யூ ஜி என் சமீர மற்றும் பல இராணுவ உயர் அதிகாரிகள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

|