வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் திறமைவாய்ந்த இலங்கை இராணுவ நாய்களுக்கு அடையாளச் சின்னங்கள்
19th November 2017
இலங்கை இராணுவ 14ஆவது பொறியியளாலர் படையணிக்குரிய இராணுவத்தில் பயிற்ச்சி பெற்ற 08 நாய்களுக்கும் இவைகளை வழிநடத்திய இராணுவ வீரர்களையும் கௌரவப்படுத்தி அடையாளச் சின்னங்கள் வழங்கப்பட்டது.
இராணுவ பொறியியளாலர் படைத் தளபதி மேஜர் ஜெனரால் சுதந்த ரனசிங்க அவர்களது அழைப்பை ஏற்று இராணுவ பொறியியளாலர் பிரதானி மேஜர் ஜெனரால் டட்லி வீரமன் அவர்கள் பிரதம அதிதியாக இந்த நிகழ்விற்கு வருகை தந்தார்.
இந் நிகழ்வானது மத்தேகொடயில் அமைந்துள்ள இராணுவ பொறியியளாலர் படையணியின் செபர் மைதானத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பு அனைத்தும் 14ஆவது பொறியியளாலர் படையணியின் கட்டளை தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் பிரதீப் சிரிவர்தன அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
மேலும் இந்தநிகழ்வின் போது இராணுவ பொறியியளாலர் படையணியினர் மற்றும்இந்த பயிற்சி பெற்ற நாய்களின் சகாச நிகழ்வுகளும் இந்த மைதானத்தில் இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து இராணுவ பொறியியளாலர்களினால் 143 இரசாயன,உயிரியல்,கதிர்வீச்சுமற்றும் அணுசக்தியினால் மிதிவெடிகளை அகற்றும் கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றது இராணுவ வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
இந்த நிகழ்வில் பொறியியளாலர் படையணியின் கட்டளை தளபதி மற்றும்57ஆவது படைப் பிரிவின்படைத்தளபதி மற்றும் பொறியியளாலர் படைத்தலைமையகத்தின் படைத்தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்த கொண்டனர்.
|