இராணுவ தளபதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு விஜயம்
19th November 2017
கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் தடவையாக தனது விஜயத்தை மேற்கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வரவேற்றார்.
முதல் கட்டமாக இராணுவ தளபதி படையணி தலைமையகத்தின் வளாகத்தினுள் உள்ள நினைவு துாபிகளுக்கு உயிர் நீத்த படை வீரர்களை கௌரவித்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதி படையினர் மத்தியில் உரையை ஆற்றினார். அந்த உரையின் போது பெருமை படைத்த உறுப்பினர்களாக அர்ப்பணிப்புடன் மற்றும் உட்சாகத்துடன் இராணுவத்தினர் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
இராணுவத்தில் புலனாய்வு படையணியானது இதுவரை நாட்டிற்காக பாராட்டத்தக்க சேவையை வழங்கியுள்ளது. குறிப்பாக நாடு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தபோது தனது சேவையை சிறந்த முறையில் நாட்டுக்காக வழங்கியதென்று கருத்தை தெரிவித்தார்.
மேலும் 2018 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் ரத்த ராகின ஜத்தி - ஸ்ரீலங்கா இராணுவம் என்ற பெயரில் ஒரு புதிய சகாப்தத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இராணுவம் நாட்டின் பாதுகாவலர்களாக எப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர் விளக்கினார்.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்டபெற்றது.
பின்னர் இராணுவ தளபதி மற்றும் புலனாய்வு படைத் தளபதிகளுக்கு இடையில் இராணுவ புலனாய்வு பயிற்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இறுதியில் புலனாய்வு படைத் தளபதியினால் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இறுதியில் இராணுவ தளபதி அவரின் வருகையையிட்டு படையணி தலைமையகத்தில் பிரமுகர்களின் வருகை புத்தகத்தில் இராணுவ தளபதி கையொப்பமிட்டு தலைமையகத்தில் சேவை புரியும் அதிகாரிகள் மற்றும் படையினருடன் குழு புகைப்படத்திலும் இணைந்திருந்தார்.
|